லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சயீஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, பூர்ணா, போமன் இரானி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

Kaapaan Telugu Title Is Set To Release By Tomorrow

சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட டீஸர் அனைவரையும் ஈர்த்தது. படத்தின் வில்லன் சிராக் ஜானி G எனும் குஜராத்தி படத்தில் நாயகனாக நடிக்கும்போது அடிபட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. வரும் ஜூன் 29-ம் தேதியிலிருந்து காப்பான் ஷூட்டிங் துவங்கவுள்ளதென நெருங்கிய சினிமா வட்டாரம் மூலம் தகவல் வெளியானது. அதில் வில்லன் சிராக் ஜானி கலந்துகொள்வார் என்று தெரியவந்தது.

Kaapaan Telugu Title Is Set To Release By Tomorrow

காப்பான் படத்தின் தெலுங்கு டைட்டிலை இயக்குனர் ராஜமௌலி இன்று காலை வெளியிடுவதாக இருந்தார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் விஜய நிர்மலா இன்று காலை காலமானதால், டைட்டில் வெளியீடு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெளிவாக இயக்குனர் கே.வி.ஆனந்த் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.