அவன் இவன் ,தெகிடி , அதே கண்கள் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜனனி ஐயர்.பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் நன்கு தெரிந்த முகமானார்.தொல்லைக்காட்சி உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் ஜனனி ஐயர்.

தற்போது யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.முத்துக்குமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படம் உருவாகிறது.படத்தில் அழகம் பெருமாள் ஒரு அரசியல்வாதியாக நடிப்பதாகவும்,அவரது மகளாக ஜனனி ஐயர் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காமெடி Fantasy படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ஜனனி ஐயர் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.