மூடர் கூடம் திரைப்படத்தை இயக்கிய இளம் இயக்குனர் நவீன்,சிறிய இடைவேளைக்கு பிறகு இயக்கம் படம் அலாவுதீனின் அற்புத கேமரா.இந்த படத்தில் நவீன் ஹீரோவாகவும் நடிக்கிறார் ,அவருக்கு ஜோடியாக கயல் ,பரியேறும் பெருமாள் படங்களில் ஹீரோயினாக நடித்த ஆனந்தி நடிக்கிறார்.நடராஜன் சங்கரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் முதல் பாடல் இன்று வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இவனே இவனே ஹீரோ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை பார்த்திபன்,கெளதம் மேனன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்