ஏஞ்சலினா, சாம்பியன் படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கென்னடி கிளப். சசிகுமார், இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம் மகளிர் கபடியை கருவாக கொண்டு உருவாகி வருகிறது. 

kennedyclub

சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காயத்ரி மற்றும் புதுமுகங்கள் மீனாட்சி, நீது, சவும்யா, ஸ்ம்ர்தி, சவுந்தர்யா உள்ளிட்ட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்திலிருந்து கபடி கபடி வீடியோ பாடல் வெளியானது. ரேஸ்மி சதீஷ், ஸ்ரீநிதி, சூர்யா பத்ரிநாத் ஆகியோர் பாடியுள்ளனர்.

kennedyclub

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், இப்படத்தின் விநியோக உரிமையை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் கைபற்றியுள்ளதாம். ஏற்கனவே தளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் விநியோக உரிமையையும் இந்நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது என்பது கூடுதல் தகவல்.