இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் பசங்க கிஷோர், லவ்லின், கிஷோர், ஸ்ரீ ரஞ்சினி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் ஹவுஸ் ஓனர்.

House Owner Movie Review Featuring Kishore Sri ranjini Lakshmi Ramakrishnan

பலத்த மழையில் சொந்த வீட்டில் மாட்டிக்கொண்ட கணவன் மனைவி என்ன செய்கிறார்கள், அவர்களது மலரும் நினைவுகள் சேர்ந்தது தான் இந்த ஹவுஸ் ஓனர். Alzeimer எனும் வியாதியால் அவஸ்த்தை படும் கணவர் வாசு , அவரை குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் மனைவி கீதா. இந்த இருவரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதவு தான் இந்த ஹவுஸ் ஓனர் படத்தின் கதைச்சுருக்கம்.

House Owner Movie Review Featuring Kishore Sri ranjini Lakshmi Ramakrishnan

முதலில் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பற்றி கூற விரும்புகிறோம். நிகழ்ச்சித்தொகுப்பாளர் லக்ஷ்மியை விமர்சனம் செய்யலாம். ஆனால் இயக்குனர் லக்ஷ்மியை நொடிக்கு நொடி பாராட்ட கடமை பட்டிருக்கிறோம். செட் ப்ராபார்ட்டி முதல் துவங்கி கேரக்டரை செதுக்கியது வரை பட்டையை கிளப்பியிருக்கிறார் இயக்குனர். அக்ரஹார வீடு, பாலக்காட்டு பேச்சு தோரணை என அனைத்திலும் கவனம் செலுத்தியுள்ளனர் படக்குழுவினர். நடிகை ஸ்ரீ ரஞ்சினிக்கு டப்பிங் குடுத்ததும் பிரமாதம். ஒரு இடத்தில் கூட பிசிறு தட்டாமல் இருந்தது.

House Owner Movie Review Featuring Kishore Sri ranjini Lakshmi Ramakrishnan

படத்தின் சூழலுக்கு ஏற்றவாறு சவுண்ட் டிசைன் செய்தது ஹாட்ஸ் ஆஃப். சரியான இடத்தில் மழைச்சத்தம், சாரல் சத்தம், என அசத்தியுள்ளார் தபஸ் நாயக். ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு இருந்தது. முதல் பாதி சற்று மெல்லமாக இருந்தாலும், இரண்டாம் பாதிக்கு ஏற்ற கதாகாலாட்சியத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த படமும் 1மணி நேரம் 40 நிமிடம் என்னும் ரன்-டைம் வெற்றி பாதைக்கு முதுகெலும்பாக விளங்குகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை சில இடங்களில் சற்று சத்தமாக உள்ளது. இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. பக்கத்து வீட்டினர் மாத்யூ அவரது மகன் ஜான், தொலைபேசியில் பேசும் மகள் என படத்தில் சில இடங்களில் முகம் காட்டாத நபர்களின் நடிப்பு இருந்தாலும், ஆடியன்ஸ் அனைவருக்கும் புரிவது சற்று சிரமம்.

ஓய்வுபெற்ற மேஜர் வாசுதேவனின் இளமை பருவம் மற்றும் முதுமை பருவம் என நடிப்பு பிரமாதம். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் வரும் ஸ்ரீ ரஞ்சினி, இந்த படத்தில் வெகுவாக கவர்ந்துள்ளார். படத்தில் பார்ப்பன பின்னணியை தேவை என்பதால் வைத்துள்ளனர். இதனால் அனைத்து தரப்பு ஆடியன்ஸ் உடன் கதையை இணைக்க முடியுமா ? ஏற்றுக்கொள்வார்களா என்பது அவரவர் மன முதிர்ச்சியை பொறுத்தே.

House Owner Movie Review Featuring Kishore Sri ranjini Lakshmi Ramakrishnan

வருங்காலத்தை நோக்கி செல்லும் இளைஞர்களுக்கு, கடந்தகால வாழ்க்கையை நினைக்க விரும்பும் பெரியவர்களுக்கு இந்த ஹவுஸ் ஓனர் திரைப்படம் பொக்கிஷமாக விளங்கும். சிறிய பட்ஜெட்டில் தரமான படைப்பை தந்த படக்குழுவினரை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. ஒரு மணிநேரம் ரசிகர்களை வீட்டில் ஒருவராக அமரச்செய்த ஹவுஸ் ஓனர் படக்குழுவினருக்கு நன்றி. தரமான படைப்பை ஊக்குவிப்பதில் திரை விரும்பிகளுக்கு பங்குண்டு என்பதை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறோம்.

கலாட்டா ரேட்டிங் - 3.25/5