மாயா படத்தின் மூலம் பேய் படங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்தவர் அஸ்வின் சரவணன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய படம் இறவாக்காலம்.தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் SJ சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் சில காரணங்களால் ரிலீசாகாமல் போனது.

Game Over Director Ashwin Saravanan Joins Hands With This Leading Production Company

இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தாப்ஸீ நடிப்பில் ,கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான கேம் ஓவர் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.தற்போது இவர் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Game Over Director Ashwin Saravanan Joins Hands With This Leading Production Company

விஸ்வாசம்,தனுஷ் நடிக்கும் படம் என செம பிஸியாக இருக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக அஸ்வின் சரவணன் இயக்கம் படத்தினை தயாரிக்க உள்ளனர் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Game Over Director Ashwin Saravanan Joins Hands With This Leading Production Company