துப்பாக்கி முனை படத்தினை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் படம் அசுரகுரு.மஹிமா நம்பியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,ஜெகன்,மனோபாலா,ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மோகன் ராஜாவின் உதவியாளராக இருந்த ராஜதீப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.கணேஷ் ராகவேந்திரா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.JSB பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.எவனானாலும் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்