தமிழ் செய்திகள்

Theri : தளபதி 63 குறித்த சிறப்பு தகவல் !

By | Galatta |

Theri : தளபதி 63 குறித்த சிறப்பு தகவல் !

Theri : தளபதி 63 குறித்த சிறப்பு தகவல் !
June 13, 2019 12:13 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் Firstlook ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.தற்போது இந்த படம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது.படத்தில் விஜய் வசிக்கும் இடத்தின் பெயர் சமாதானபுரம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

சமாதானபுரத்தில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.குறிப்பாக விஜயின் இன்ட்ரோ காட்சி தியேட்டரில் தெறிக்கும் என்று தெரிகிறது.இந்த தகவல் சரியா என்பதை நாம் பட ரிலீஸ் வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More