தல அஜித் அறிமுகமான அமராவதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் பானு பிரகாஷ். இவரது மகன் தான் நடிகர் ராஜ் ஐயப்பன். 100 படத்தில் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். 

Emerging Actor Raj Iyappan Clarifies On Rumour About Thala Ajiths Encourgement

சில வருடத்திற்கு முன் அஜித் பானு பிரகாஷிடம் பேசினாராம், அப்போது ராஜ் ஐயப்பன் பற்றி கேட்டு அவரது புகைப்படங்களையும் அனுப்ப கேட்டாராம். புகைப்படங்களை பார்த்ததும், நல்ல லுக் உள்ளது கண்டிப்பாக நடிகராக வாய்ப்பு உள்ளது என்றாராம்.

Emerging Actor Raj Iyappan Clarifies On Rumour About Thala Ajiths Encourgement

இது மெய்யான தகவலா என்று தெரியாமல் இணையத்தில் இச்செய்தி பெரிதளவில் பேசப்பட்டதை தொடர்ந்து, கலாட்டா சிறப்புக்குழு நடிகர் ராஜ் ஐயப்பனை தொடர்பு கொண்டு பேசினோம்.

Emerging Actor Raj Iyappan Clarifies On Rumour About Thala Ajiths Encourgement

அப்போது பேசுகையில் லயோலா கல்லூரியில் விஸ்காம் படிப்பு பயிலும் தருணத்தில் பிரபல செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திராவிடம் இன்டெர்னாக பணிபுரிந்துள்ளாராம். அப்போது இயக்குனர் சாம் ஆன்டன் வில்லன் ரோலுக்கு சரியாக வரும் என்பது குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். 100 படம் வெளியாவதற்கு முன்பு இதெல்லாம் நடந்தவை என்று விளக்கமளித்தார். 

Emerging Actor Raj Iyappan Clarifies On Rumour About Thala Ajiths Encourgement

முதல் படத்திலேயே நல்ல துவக்கத்தை பெற்ற ராஜ் ஐயப்பனின் திரை பயணம் சிறப்பாக அமைய கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.