இயக்குனர் பாலாஜி மோஹன் இயக்கத்தில் குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் மாரி 2 படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். 

நடிகர் தனுஷ் தயாரித்து நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏற்கனவே வெளிவந்த ரவுடி பேபி பாடல் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் அதிக பார்வையாளர்களை ஈர்த்து டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தற்போது இப்படத்தின் கர்நாடக விநியோக உரிமையை Goldie Films எனும் நிறுவனம் 1.44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா திரைப்படத்திற்கு இவர்கள் தான் கர்நாடக விநியோகஸ்தர்கள் என்பது கூடுதல் தகவல்.