சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் விஸ்வாசம்.

இமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமைய்யா, விவேக், கோவை சரளா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன், எமோஷனலான கதையம்சம் கொண்ட இப்படத்தை தந்த இயக்குனர் சிவாவை பாராட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் இசையமைப்பாளர் இமான் படத்திற்கு துணையாக இருந்ததாக கூறியுள்ளார். நடிகை நயன்தாராவின் ரோல் சிறப்பாக அமைந்தது என்றும் கூறியுள்ளார்.