மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் RK நகர் படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. black ticket பெருமையுடன் வழங்கும் இந்த படத்தை பத்ரி கஸ்தூரி மற்றும் ராஜலக்ஷ்மி தயாரிக்கின்றனர்.

இசை சுனாமி பிரேம்ஜி இசையமைக்கிறார். தேர்தல் தருணத்தில் இந்த படம் வெளியாவது, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த படம் குறித்து ஜனங்களின் கலைஞன் நடிகர் விவேக் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். இதற்கு தனது நன்றியை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.

STR, கல்யாணி ப்ரியதர்ஷன் வைத்து இவர் இயக்கவிருக்கும் மாநாடு படம் வரும் மே மாதம் முதல் துவங்கப்படுகிறது.