தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர் தனுஷ்.நடிப்பதில் மட்டுமின்றி தயாரிப்பு,இயக்கம்,பாடலாசிரியர் என பல பரிமாணங்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

Dhanush Tweet Vadachennai 2 Not Shelved Vetrimaran

தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் மற்றும் ஆங்கிலத்திலும் தனது திறமையை நிரூபித்தார் தனுஷ்.கடந்த வருடம் வெளியாகி விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற படம் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை.

Dhanush Tweet Vadachennai 2 Not Shelved Vetrimaran

இந்த படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டுவிட்டது என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.இந்த செய்தியை பார்த்த தனுஷ் இது வெறும் வதந்தி தான் வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என்று தெரிவித்துள்ளார்.

Dhanush Tweet Vadachennai 2 Not Shelved Vetrimaran

ரசிகர்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என் படம் குறித்த தகவல்களை எனது ட்விட்டர் பக்கத்தில் கண்டிப்பாக பதிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் மிகுந்த மகிழிச்சியில் உள்ளனர்.

Dhanush Tweet Vadachennai 2 Not Shelved Vetrimaran