தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு அசுரன் என பெயரிடப்பட்டுள்ளது. கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரிக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் உடன் தனுஷ் இணைகிறார். 

Dhanush Starring Asuran Gets A New Update From The Close Sources

தனுஷ் இரட்டை வேடமிட்டு நடிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் நடிகர் கருணாஸ் மகன் கென், பசுபதி, பாலாஜி சக்திவேல் போன்ற நடிகர்கள் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.

Dhanush Starring Asuran Gets A New Update From The Close Sources

சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், அசுரன் படத்தின் இரண்டு பாடல்களுக்கும் வரிகள் ரெடியாக இருப்பதாகவும், பாடல் ரெகார்டிங் துவங்கியதாகவும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Dhanush Starring Asuran Gets A New Update From The Close Sources

தற்போது படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் வரும் 20-ம் தேதி முதல் துவங்கப்படும் என நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியானது.

Dhanush Starring Asuran Gets A New Update From The Close Sources