தமிழ் செய்திகள்

காஞ்சனா ரீமேக்கில் மீண்டும் இணைவாரா லாரன்ஸ் ? விவரம் உள்ளே

By | Galatta |

காஞ்சனா ரீமேக்கில் மீண்டும் இணைவாரா லாரன்ஸ் ? விவரம் உள்ளே

காஞ்சனா ரீமேக்கில் மீண்டும் இணைவாரா லாரன்ஸ் ? விவரம் உள்ளே
May 26, 2019 12:00 PM IST

பேய் பட பிரியர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய படம் காஞ்சனா.ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இதன் அடுத்த பாகங்கள் உருவாகின இந்த படத்தின் மூன்றாம் பாகம் தற்போது வெளியிடப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ்.தனது சூப்பர்ஹிட் படமான காஞ்சனாவை ஹிந்தியில் ரீமேக் செய்து வந்தார்.இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.kiara அத்வானி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

லக்ஷ்மி Bomb என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் Firstlook போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.இதனை அடுத்து இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.இதனை அடுத்து தற்போது மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் நான் விலகியபிறகு எனது ரசிகர்களும்,அக்ஷய் குமார் ரசிகர்களும் மீண்டும் இந்த படத்தில் இணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.எனக்கும் இந்த படத்தை இயக்கவேண்டும் என்பது ஆசை தான் இது அனைத்தும் இன்று என்னை சந்திக்க வரும் படத்தின் தயாரிப்பாளர்கள் கையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனக்கும் என் வேலைக்குமான சுயமரியாதை கிடைக்கும் பட்சத்தில் இந்த படத்தில் மீண்டும் இணைவேன் என்று தெரிவித்துள்ளார்.இதனை அடுத்து இவர் இந்த படத்தை இயக்குவாரா இல்லையா என்பது குறித்து இன்று தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More