சந்தோஷ் நாராயணனின் மிகப்பெரிய கனவு !
By Sakthi Priyan | Galatta | January 12, 2019 10:25 AM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை தந்த கார்த்திக் சுப்பராஜ் மற்றும் பேட்ட படக்குழுவினரை ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தற்போது இப்படத்தை பார்த்து விட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட்டரில் , இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் இயக்கியது, தனது மிகப்பெரிய கனவு நிறைவேறிவிட்டதாக பதிவிட்டிருக்கிறார். ரஜினிகாந்தின் கமிட்மென்ட் குறித்தும் கூறியுள்ளார்.
My biggest dream of watching a @karthiksubbaraj film with our superstar has been fulfilled ! The cuteness, energy and commitment of @rajinikanth sir were amazing in #Petta. A brand new wave of entertainment has begun. Best wishes to cast&crew and love you all for your support !
— Santhosh Narayanan (@Music_Santhosh) January 11, 2019