விர்ஜின் பசங்களின் நாயகன் என இளைஞர்கள் மத்தியில் போற்றப்படும் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பிஸியாக உள்ளார். 

திரை ஜாம்பவான்களான பாலா, ராஜீவ் மேனன், வசந்தபாலன் என்று முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் ஜீ.வி.பிரகாஷ் தற்போது தனசேகரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்துக்கு வலு சேர்க்கும் வகையில், மணிரத்னம் வசனம் எழுதுகிறார். முன்னதாக இந்த படத்தை மணிரத்னமே இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் பட இயக்கத்தில் கவனம் செலுத்துவதால், இதற்கு வசனம் மட்டும் எழுதுகிறார்.

96, சீதக்காதி போன்ற படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது கூடுதல் தகவல்.