இறுதிச்சுற்று படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிக்ஸை வெற்றியுடன் துவக்கிய மாதவன்.அடுத்ததாக விக்ரம் வேதா படத்தின் மூலம் செம ஹிட் கொடுத்தார்.செலெக்ட்டிவ் ஆக படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.

Charlie Tamil Remake Madhavan As Hero

அனுஷ்கா நடிக்கும் ஒரு தெலுங்கு படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.இதனை அடுத்து இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.மலையாள சூப்பர்ஸ்டார் துல்கர் சல்மான் நடிப்பில் 2015ல் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் சார்லி.இந்த படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கவுள்ளார்.

Charlie Tamil Remake Madhavan As Hero

இந்த படத்தை அறிமுக இயக்குனர் திலீபன் இயக்குவார் என்ற தகவலும் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.துல்கர் நடித்த கதாப்பாத்திரை மாதவன் எவ்வாறு திரையில் கொண்டுவர போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Charlie Tamil Remake Madhavan As Hero