சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் SK 14.Sci-Fic வகை படமாக உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.நீரவ் ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.24AM ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.தற்போது தல அஜித் நடிக்கும் தல 59 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்கும் நீரவ் ஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

நீரவ் ஷாவின் கால்ஷீட் தற்போது தல 59 படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இவரால் SK 14 படத்தில் பணியாற்ற முடியவில்லை.இதையடுத்து சூது கவ்வும்,கனா போன்ற படங்களில் பணியாற்றிய தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக தற்போது இணைந்துள்ளார்.

இவர் இந்த schedule-க்கு மட்டும் பண்ணியாற்றுவாரா அல்லது நீரவ் ஷா இந்த படத்திற்கு திரும்புவார் உள்ளிட்டவற்றை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.