தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்திற்காக பிரமாண்டமாக Football ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த செட்டில் அடுத்த 50 நாட்களுக்கு ஷூட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

சில நாட்களுக்கு முன் விஜய் ஸ்டேடியத்துக்குள் வரும் காட்சி படமாக்கப்பட்டது என்ற தகவலையும் அவருடன் யோகிபாபு மற்றும் விவேக் உடனிருந்தனர் என்ற தகவலையும் நாம் தெரிவித்திருந்தோம்.தற்போது இந்த படத்தில் நடக்கும் முதல் மேட்ச் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருப்பார் என்பது நாம் அறிந்த விஷயமே.தற்போது முதல் மேட்ச்க்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.இந்த மேட்ச் தமிழ்நாடு மகளிர் அணி மற்றும் மணிப்பூர் மகளிர் அணிக்கு இடையில் நடக்கும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.இந்த அணியில் இந்துஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

இந்த போட்டி FIFA மற்றும் AIFF இணைந்து நடத்தும் மகளிருக்கான நேஷனல் லெவல் கால்பந்து போட்டி என்ற தகவலும் கிடைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed

Breaking Details on First Match of Thalapathy Vijay Team in Thalapathy 63 Revealed