தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

இந்த படத்தின் சிங்கப்பெண்ணே என்ற பாடல் சமூகவலைத்தளங்களில் லீக் ஆகி வைரலாக பரவி வந்தது.இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதனை பார்த்த நடிகை கஸ்தூரி லீக் ஆனா என்ன ஏற்கனவே கேட்ட பாட்டுத்தானே புதுசா பிகில் மட்டும் செத்துருக்காரு என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் நடிகையின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.