தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடலை விஜய் பாடியுள்ளார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

சமூகவலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் விஷயமாக இருப்பது வயதான புகைப்படம்.அனைவரும் அவர்களது புகைப்படத்தை போட்டிபோட்டு எடிட் செய்து போட்டு வருகின்றனர்.இந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் இயக்குனர் அட்லீ.

தன்னுடைய புகைப்படத்தை வயதானவர் போல் எடிட் செய்து பதிவிட்டுள்ளார்.பிகில் படத்தில் உள்ள வயதான விஜயை போல இவர் அப்லோட் செய்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47) on