அஷோக் செல்வன்,ஜனனி ஐயர் நடிப்பில் வெளியாகி 2014-ல் சூப்பர்ஹிட்டான திரைப்படம் தெகிடி.இந்த படத்தை இயக்கிய ரமேஷ் அடுத்ததாக சிபிராஜை ஹீரோவாக வைத்து படம் எடுக்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின.எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

சிபிராஜ் தற்போது ரங்கா,மாயோன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இரண்டு படங்களுமே ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளன.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் பல்வேறு காரணங்களுக்காக இந்த படம் கைவிடப்பட்டது என்று நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெகிடி திரைப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனால் இந்த இயக்குனரின் அடுத்த படைப்பான இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் Drop ஆனதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.