மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தற்போது VSP 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Amala Paul Opens Up on Being Removed From VijaySethupathi Movie

சந்திரா ஆர்ட்ஸ் பேனர் இந்த படத்தை தயாரிக்கிறது.தடம்,மீகாமன்,தடையற தாக்க உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் பழனியில் சில நாட்களுக்கு முன் தொடங்கியது.

Amala Paul Opens Up on Being Removed From VijaySethupathi Movie

இந்த படத்தில் அமலா பால் முதலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் நேற்று அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் இந்த படத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியானது.தற்போது இந்த படத்தில் இருந்து என்னை தயாரிப்பாளர்கள் நீக்கிவிட்டனர் என்று அமலா பால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Amala Paul Opens Up on Being Removed From VijaySethupathi Movie

சரியான காரணம் கூறாமல் தன்னை படத்தில் இருந்து நீக்கிவிட்டனர் என்றும் நான் நடிக்கும் படங்களில் எப்போதும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையூறாக இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த தயாரிப்பு நிறுவனத்துடனும் எந்த பிரச்னையும் இல்லாத நிலையில் ஆடை டீஸர் வெளியான பிறகு என்னை நீக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Amala Paul Opens Up on Being Removed From VijaySethupathi Movie

Amala Paul Opens Up on Being Removed From VijaySethupathi Movie