இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 59 படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான PINK படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் டைட்டில் நேர்கொண்ட பார்வை என அறிவிக்கப்பட்டது. போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

Ajiths Nerkonda Paarvai Trailer Featuring Thala Ajith With VithyaBalan And Shradha

அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி அசத்திவருகிறது.

Ajiths Nerkonda Paarvai Trailer Featuring Thala Ajith With VithyaBalan And Shradha

ஆகஸ்ட் 10-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியாகிறது. தற்போது படத்தின் இரண்டாம் போஸ்டர் மற்றும் ட்ரைலர் குறித்த தகவல் வெளியானது. படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகியது. கொண்டாடத்தில் தல ரசிகர்கள்.