பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற ஆவலோடு மொத்த தமிழ் சினிமாவும் காத்திருக்கிறது.தனுஷை வைத்து இவர் இயக்கயிருந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் லண்டனில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.இந்த படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துளளது.

இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளார் என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பேட்ட படத்தில் பண்ணியாற்றிய திருநாவுக்கரசு பண்ணியாற்றுவார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.