AGS நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63. படம் குறித்த ருசிகர தகவல்கள் ஏதாவது வராதா என்ற ஏக்கத்தில் தவிக்கும் ரசிகர்களுக்கு, படப்பிடிப்பு தளத்தில் இருந்து தினமொரு வீடியோ தொகுப்புகள் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் என்பதை கடந்து ரசிகர்களின் அண்ணனாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரை தொடர்ந்து தற்போது இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கும் ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். படப்பிடிப்பின் முதல் நாளிலே இவ்வளவு கூட்டம் இருப்பது நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை காண்பிக்கிறது. 

After Thalapathy Vijay Its Sivakarthikeyan To Have A Huge Fans Base In First Day Shoot

தற்போது இரும்புத்திரை படம் மூலம் பிரபலமான பி.எஸ்.மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் பூஜையை படக்குழுவினர் சென்னையில் நேற்று நடத்தினர். இப்படத்துக்கு ‘ஹீரோ’ என்று தலைப்பும் வைத்துள்ளனர்.

After Thalapathy Vijay Its Sivakarthikeyan To Have A Huge Fans Base In First Day Shoot

கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், இவானா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. SK திரைப்பயணத்தில் இந்த படம் மகத்தான வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.

After Thalapathy Vijay Its Sivakarthikeyan To Have A Huge Fans Base In First Day Shoot