தமிழ் செய்திகள்

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபுதேவா படம் ! மேலும் படிக்க

By | Galatta |

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபுதேவா படம் ! மேலும் படிக்க

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிரபுதேவா படம் ! மேலும் படிக்க
June 12, 2019 16:56 PM IST

சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல் .கண்டேன் படத்தை இயக்கிய முகில் இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார்.நிவேதா பெத்துராஜ் இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

Jhabak மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படம் குறித்த அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் இமான் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் முதல் பாடலான உதிரா உதிரா என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்.ஷ்ரேயா கோஷல் மற்றும் ஸ்ரீகாந்த்ஹரிஹரன் இந்த பாடலை பாடியுள்ளனர்.தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ஷ்ரேயா கோஷல் இமான் இசையில் இந்த படத்தில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More