தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஹீரோக்கள் தங்களது கெட்டப்பை மாற்றி பெண் வேடமிட்டு நடித்துள்ளனர்.அவ்வாறு இவர்கள் நடித்த படங்கள் blockbuster ஆகியுள்ளன.கமல் நடித்த அவ்வை ஷண்முகி படத்தில் பல படங்களில் இந்த trend உருவானது.

இந்த trend தற்போதுள்ள காலகட்டத்திற்கும் workout ஆகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் 2017-ல் வெளியான ரெமோ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் இவர் பெண் வேடமிட்டு நடித்திருந்ததை பலரும் பாராட்டினர்.விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பரத் நடிப்பில் வெளியாக இருக்கும் பொட்டு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரில் ஹீரோ பரத் பெண் வேடமிட்டுள்ளார்.இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்த படத்தில் பரத்துடன் இணைந்து நமீதா,இனியா,ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.