கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு மகளிர் அணி என பெயரிடப்பட்டுள்ளது. 

விர்ஜின் பசங்களின் நாயகன் ஜீ.வி.பிரகாஷ் தனசேகரன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கிறார் என்பது தெரியவந்தது.

இப்படத்துக்கு வலு சேர்க்கும் வகையில், மணிரத்னம் வசனம் எழுதுகிறார். முன்னதாக இந்த படத்தை மணிரத்னமே இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே மணிரத்தினம் பட வசனத்தை செக்கச்சிவந்த வானம் படத்தில் பேசியிருப்பார் ஐஸ்வர்யா. இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு சகோதரியாக நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Actress Aishwarya Rajesh To Starr In Maniratnams Movie Featuring GV In Lead