இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் என கருதப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக படங்கள் கைவசம் வைத்துள்ளார். கோலிவுட் வட்டாரத்தில் சிவகார்த்திகேயனுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. 

Actress Aishwarya Rajesh In Talks For SK 16 Project Directed By Pandiraj

ஃபேமிலி ஆடியன்ஸை அதிகமாக கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனை பெரிய திரைக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் பாண்டிராஜ். மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் வைத்து மூன்றாவது முறையாக படம் இயக்கவுள்ளார்.

Actress Aishwarya Rajesh In Talks For SK 16 Project Directed By Pandiraj

இந்த படத்தை மார்க்கெட் லீடரான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இறுதியாக சூப்பர் ஸ்டார் வைத்து பேட்ட படத்தை தயாரித்து வெற்றி கண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Actress Aishwarya Rajesh In Talks For SK 16 Project Directed By Pandiraj

கடைக்குட்டி சிங்கம் படத்திற்கு பிறகு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைய வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுகள் போய் கொண்டிருக்கிறது.

Actress Aishwarya Rajesh In Talks For SK 16 Project Directed By Pandiraj

படக்குழுவினர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் உறுதி செய்ய முடியாது. விரைவில் இதுகுறித்த தகவலை இயக்குனர் பாண்டிராஜ் வெளியிடுவார் என்றே கூறலாம்.