வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். நட்சத்திரம் என்ற இமேஜை தாண்டி, நம் தினசரி வாழ்வில் பார்த்து பழகும் எதார்த்தமான நபராக திரையில் தோன்றும் குணமுடையவர்.

Actor Vishnu Vishal Gets Divorced With His Spouse Rajini Seven Years Relationship Came To An End

தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ஓர் அதிர்ச்சியான செய்தியை கூறியுள்ளார். அதில் நானும் என் மனைவி ரஜினியும் ஓராண்டு காலம் பிரிந்து வாழ்ந்தோம். தற்போது முறையாக விவாகரத்து பெற்றுள்ளோம்.

எங்களது அழகான மகனுக்கு நல்ல வாழ்வை அமைத்து தர இருவருக்கும் முக்கிய பங்குண்டு. ஏழாண்டு காலம் சிறந்த வாழக்கையை வாழ்ந்தோம். அதுமட்டுமல்லாமல் நல்ல நண்பர்களாவும் இருந்தோம் என்றும் குறிப்பிட்டுளார்.

மேலும் குழந்தை மற்றும் குடும்பத்தின் நலன் கருதி இவ்விஷயத்தை யாரும் பெரிதாக ஆக்கிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். ராட்சசன் திரைப்படம் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் நிலையில் இச்செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.