இளைஞர்களின் இன்ஸ்பிரஷன் என போற்றப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் மறைந்த நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மறைந்த ஜெயராமனின் உடல் சென்னையிலிருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதிற்கான செலவையும் ஏற்று கொண்டார். சிவகார்த்திகேயன் செய்த இக்காரியத்தை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா. 

Actor Sivakarthikeyan Came Forward To Take Care Of Late Nel Jayaraman Son Education

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவான நெல் விதைகளை பாதுகாத்ததால் நெல் ஜெயராமன் என அழைக்கப்பட்டு வந்தார். கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த ஜெயராமன் இன்று உலகத் தமிழர்களே அறியும் அளவுக்கு என்ன செய்தார்? நம்மாழ்வாரை பின்பற்றி இயற்கை விவசாயத்தை பாதுகாக்க போராடினார்.

கடந்த 22 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் விதைகளை சேகரிக்க பாடுப்பட்ட ஜெயராமன், 174 வகையான விதைகளை சேகரித்தார். 12 ஆண்டுகளாக அவற்றை மறு உற்பத்தி செய்து 37 ஆயிரம் விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற செய்தார். இன்று காலை 8 மணி முதல் 11 வரை அவரது உடல் தேனாம்பேட்டையில் உள்ள ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பது கூடுதல் தகவல்.