டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் கொரில்லா. இப்படத்தில், யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் காமெடியன்களாக நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

ஜீவாவின் 29வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் முதல் முறையாக தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பன்சி குரங்கு நடிக்க உள்ளது. தற்போது இப்படம் ஜனவரியில் வெளிவரும் என செய்தி வெளியாகியது.

இதற்கு முன்னதாக, ஹாலிவுட்டில் தாய்லாந்தில் புகழ்பெற்ற சாமுட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மனித குரங்கான சிம்பன்சிகள் தான் ஹேங்ஹோவர் 2, பிளேனட்ஸ் ஆஃப் தி ஏப்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளது என்பது கூடுதல் தகவல்.