வெகு நாட்களாக சினிமாவை விட்டு விலகியிருந்த நடிகர் மற்றும் இயக்குனரான சீமான். ஒருசில படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த ‘தவம்‘ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிக்கும் ‘பகலவன்’ என்ற படத்தை சீமான் இயக்குவார் என்று கூறப்பட்டாலும், அப்படம் ஒருசில காரணங்களால் டிராப் ஆகிவிட்டது என கூறப்படுகிறது. 

சீமான் நடிகர் STR வைத்து படம் இயக்கவுள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், நடிகர் சிம்பு டாக்டராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. இதன் படத்தின் படப்பிடிப்பு வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் STR தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று சீமான் கூறியது குறிப்பிடதக்கது.