தமிழ் சினிமாவின் ரசிகர் படையாளும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். திரையின் முடிசூடா மன்னன் என்பதை கடந்து ரசிகர்களுக்கு உடன் பிறவா அன்னன் எனும் அந்தஸ்தை பெற்றவர். இவரது நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான படம் போக்கிரி. 

தளபதி விஜய்யின் மாஸ் நடிப்பில் உருவான இப்படம் இன்று வரை பெரிதும் பேசப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தில் விஜய்யின் அனல் பறக்கும் வசனங்களை பிரபல கிரிக்கெட் வீரரான russel arnold ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றவுடன் இந்த ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இடது கை பேட்ஸ்மேனாக இருந்தவர் தற்போது கிரிக்கெட் கமெண்ட்ரியில் இருக்கிறார்.