லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூர்யா-37. இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் ட்விட்டரில், இயக்குனர் கே.வி.ஆனந்த் சூர்யா படத்திற்கு மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று டைட்டிலை பதிவிட்டு, இதில் எந்த டைட்டில் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டார். 

இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. கையில் துப்பாக்கியுடன் உள்ள சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த், காப்பான் படத்தின் பாடல் ரெகார்டிங் பணியில் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சூர்யா ரசிகர்கள். விரைவில் பாடல் வெளியாகி ரசிகர்களின் செவிகளுக்கு விருதளிக்கும் என்றே கூறலாம்.