தமிழ் செய்திகள்

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து ! மருத்துவமனைக்கு விரைந்த விஜய்

By | Galatta |

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து ! மருத்துவமனைக்கு விரைந்த விஜய்

தளபதி 63 படப்பிடிப்பில் விபத்து ! மருத்துவமனைக்கு விரைந்த விஜய்
April 24, 2019 14:48 PM IST

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 63.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அட்லீ இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Vijay Atlee

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

thalapathy 63 poster

நேற்று தளபதி 63 செட்டில் உதவியாளர் ஒருவருக்கு Focus லைட் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் படக்குழுவினர்.தற்போது விஜய் அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

vijay visits hospital

vijay visits hospital

இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.தனது செட்டில் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More