திரை ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக தல அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படங்கள் நேற்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது. இவ்விரு படங்களுக்கும் சிறப்பான ஓப்பனிங் பெற்று அனைவரையும் ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடல் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகார பாடல் என்றே கூறலாம். இப்பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இப்பாடல் 90 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்துள்ளது. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்த இப்பாடலை எப்போது கேட்டாலும் கூஸ்பம்ஸ் என்றே கூறலாம். இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைக்காத அங்கீகாரம் மெர்சல் படத்தின் பாடலுக்கு கிடைத்துள்ளது.