முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார். அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். 

Aadhithya Varma Movie Update By Ace Cinematographer RaviKchandran

ஆதித்ய வர்மா எனும் டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசைய்யா இந்த படத்தை இயக்கிவருகிறார். படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியாகியது.

Aadhithya Varma Movie Update By Ace Cinematographer RaviKchandran

தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், ஆதித்ய வர்மா படத்தின் 50 நாள் கொண்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ஜூலை மாதம் படம் ரிலீஸாகும் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது.

Aadhithya Varma Movie Update By Ace Cinematographer RaviKchandran