லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் 29 நவம்பர் வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. 3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டு வெளியான இப்படம் இரண்டாம் நாளான இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் சீனாவிலும் ரிலீஸாகிறது. இது குறித்து லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. 47000 + 3டி திரைகள் சீனாவில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிக மக்கள் தொகையுள்ள வெளிநாட்டில் திரையிடப்படுவது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அடுத்த அங்கீகாரம் என்றே கூறலாம்.