ரஜினிகாந்தின் 2.0-வுக்கு நேரம் குறித்த ஷங்கர்!
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீஸர் நாளை எப்போது வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

By Vinesh RV | Galatta | September 12, 2018 17:44 PM IST
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டீஸர் நாளை எப்போது வெளியாகும் என்று இயக்குனர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 2.0.
இப்படத்தின் டீஸர் நாளை விநாயகர் சதுர்த்தியன்று 2D மற்றும் 3Dயில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் 2.0 டீஸர் நாளை காலை 9.00 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
#2point0 teaser pic.twitter.com/Wq3m6dKJir
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 12, 2018
இந்த படத்தின் டீஸர் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டும் 3Dயில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
TAGS: ,Rajinikanth ,Amy Jackson ,Akshay Kumar ,2.0