தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களின் வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது,தற்போது இவர்கள் புது முயற்சியாக வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியை விரைவில் தொடங்குகின்றனர்.உலகெங்கிலும் செம ஹிட் அடித்த ஒரு தொடர் Survivor இந்த தொடரை ஜீ தமிழ் தமிழில் ஒளிபரப்புகின்றனர்.

ஒரு தீவில் போட்டியாளர்கள் சில நாட்கள் தொங்கவிட்டு அங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்களை முடித்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.போட்டியாளர்களின் மனவலிமை மற்றும் உடல்வலிமையை சோதிக்கும்படி இந்த போட்டி இருக்கும்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நேயர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜீ தமிழ் தெரிவித்துள்ளனர்.Survivor நிகழ்ச்சி விரைவில் தொடங்கப்படும் என்றும் இதுகுறித்த ப்ரோமோவை வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் ஜீ தமிழ் தெரிவித்துள்ளனர்.

zee tamil to launch new adventure reality show survivor very soon