இணையத்தை அசத்தும் ஜீ தமிழ் ஹீரோயின்களின் புதிய வீடியோ !
By Aravind Selvam | Galatta | July 26, 2020 17:55 PM IST
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமான பார்வதி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பார்வதியாக நடித்து வரும் ஷபானா தான் இன்டர்நெட்,டிவி என்று எங்கு பார்த்தாலும் பேமஸ்.இவரது நடிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.மேலும் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து வருகிறார்.ஷபானா.தளபதி விஜயின் தீவிர ரசிகர்களில் ஒருவர் இவர்.
கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.தற்போது புதிய எபிசோடுகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தனது ஜீ தமிழ் தோழிகளுடன் இணைந்து ஷபானா போட்டோஷூட்கள்,லைவ் என்று வந்து ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.மேலும் டிக்டாக்கிலும் மிகவும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வந்தார் ஷபானா.மேலும் சில நாட்களுக்கு முன் ரசிகர்களுடன் இணைந்து தமிழ் கற்றுக்கொண்டும் வந்தார் ஷபானா.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று , பின்னர் பூவே பூச்சூடவா தொடரின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரேஷ்மா.இவருக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.அவ்வப்போது ஷாபனாவுடன் இணைந்து போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டு வந்தார்.
தற்போது ஷபானா மற்றும் ரேஷ்மா இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரீல்ஸ் மூலம் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளனர்.தங்கள் மனம் கவர்ந்த நாயகிகள் இருவரும் இணைந்து வீடியோ வெளியிட்டதை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Teaser of Keerthy Suresh's next film released - check out | PC Sreeram | DSP
26/07/2020 04:17 PM
Dil Bechara creates history - becomes the most watched film on OTT platform!
26/07/2020 03:13 PM
Suriya Devi tested positive for Corona Virus? - Vanitha Vijayakumar reveals!
26/07/2020 01:19 PM