தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.விதியசமான சீரியல்கள் மூலம் முன்னணி சேனல்களுக்கு டப் கொடுத்து வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.செம்பருத்தி,யாரடி நீ மோகினி,பூவே பூச்சூடவா என்று பல தொடர்கள் கடந்த சில ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகின்றன.

பல சீரியல்களுக்கு தனி தனியாக ரசிகர் பட்டாளங்கள் உள்ளன.பல சீரியல்கள் பல மைல்கல்களை பல அசைக்கமுடியாத மைல்கல்களை தாண்டி உள்ளன.இப்படிப்பட்ட ஜீ தமிழ் சீரியல் குடும்பத்தில் புதிதாக இணையும் குடும்பம் தேவயானி நடிப்பில் உருவாகும் புது புது அர்த்தங்கள் சீரியல்.இந்த தொடரின் ப்ரோமோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடர் மார்ச் 22ஆம் தேதி முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து ஜீ தமிழின் முக்கிய சீரியல்கள் ஒளிபரப்பு நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.மார்ச் 15 முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சூர்யவம்சம் தொடர் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகும்,இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்,இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடர் மார்ச் 15 முதல் 22 வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரமாக ஒளிபரப்பாகும் பின்னர் புது புது அர்த்தங்கள் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்கியதும் வழக்கம் போல இரவு 8.30 மணிக்கு யாரடி நீ மோஹினி ஒளிபரப்பாகும் , 8 மணிக்கு புது புது அர்த்தங்கள் தொடர் ஒளிபரப்பாக உள்ளது.

A post shared by TGS தமிழன் சின்னத்திரை Tv (@tgstamilanchinnathirai2)