தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு தொலைக்காட்சியாக இருந்து வருவது ஜீ தமிழ்.இந்த தொலைகாட்சிக்கென்றே தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ரசிகர்களின் ரசனை அறிந்து தங்கள் வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,சீரியல்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தனர்.

இவர்களது சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.செம்பருத்தி,ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி,பூவே பூச்சூடவா என்று 1000 எபிசோடுகளை கடந்த சீரியல்கள் ஆனாலும் புதிய சீரியல்கள் ஆனாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சூப்பர்ஹிட் சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக அசத்தி வரும் தொடர் ராஜாமகள்.Iraa அகர்வால் இந்த தொடரின் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்த தொடரின் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார்.விஜய் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

வனஜா,சத்யசாய் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.பல புதிய திருப்பங்களுடன் இந்த தொடர் 450 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.சூப்பர்ஹிட் அடித்த இந்த தொடர் நிறைவடைவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.