பெங்களூரில் பிறந்து தற்போது தமிழ்,தெலுங்கு,கன்னட உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரையில் அசத்தி வருபவர் ஆஷிகா கோபால் படுகோன்.நிஹாரிகா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

இதனை அடுத்து த்ரிவேணி சங்கமம் தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார்.அடுத்தாக ராஜா ராணி தொடரின் ரீமேக் ஆன Kathalo Rajakumari தொடரில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார் ஆஷிகா.அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பான தமிழ்செல்வி தொடரில் ஹீரோயினாக நடித்து தமிழ் சின்னத்திரையிலும் தனது என்ட்ரியை கொடுத்தார்.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.இவருக்கு சேட்டன் ஷெட்டி என்பவருடன் அக்டோபர் 2021-ல் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள மாரி என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்கிய வேடங்களில் நடிக்கிறன்றனர்.இந்த சீரியல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த சீரியல் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.