விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும்,நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும்.அப்படி இந்த தொடரில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்த தொடர் நாம் இருவர் நமக்கு இருவர்,500 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் நிறைவுக்கு வந்தது.இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தியவர் ரக்ஷா ஹோலா.இந்த சீரியலின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.இந்த சீரியல் கைவிடப்பட்டதை அடுத்து சிறிய பிரேக்கில் இருந்தார் ரக்ஷா.

இன்ஸ்டாகிராமில் பெரிதாக ஆக்டிவ் ஆக இல்லாவிட்டாலும் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார் ரக்ஷா.தமிழை தவிர வேறு மொழிகளிலும் நடித்து பிரபலமாக இருந்தார் ரக்ஷா.தற்போது இவர் தமிழில் ஹீரோயினாக நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

ஜீ தமிழில் விரைவில் ஒலிபரப்பாகவுள்ள அன்பே சிவம் தொடரில் இவர் ஹீரோயினாக நடிக்கிறார்.சிவா மனசுல சக்தி தொடரில் ஹீரோவாகி நடித்து பிரபலமான விக்ரம் இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோவை ரக்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்