இசை ரசிகர்கள் அனைவரது இதயங்களிலும் இசை அரசனாக ஆட்சி செய்யும் யுவன் சங்கர் ராஜா தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். கடந்த 25 ஆண்டுகளாக எண்ணிலடங்காத சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

மேலும் தனது பிறந்தநாளில் ரசிகர்களோடு கலந்துரையாட முடிவு செய்த யுவன் ஷங்கர் ராஜா ட்விட்டரில் #AskU1 என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார் குறித்து  ரசிகர்கள் கேட்க, இருவரையும் குறித்த சுவாரஸ்ய தகவல்களை யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்துகொண்டார்.

அஜித் குமார் குறித்து பேசியபோது "இத்தனை வருடமாக அவருடன் இணைந்து பணியாற்றுவது அற்புதமான நினைவுகளாக இருக்கிறது... ஒவ்வொரு படம் முடிந்த பிறகும் அழைத்து பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளதாக பாராட்டுவார்... அற்புதமான மனிதர்...தனிப்பட்ட முறையில் அவரோடு பணியாற்றுவது மிகவும் பிடிக்கும்" என தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் அவர்களை சந்தித்தது குறித்து கேட்டபோது தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து  பணியாற்றுவது (தளபதி - யுவன் காம்போ) விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்... அவருடனான சந்திப்பு மிக அற்புதமானது… இனிமையான மனிதர் அவர்! திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசினோம்… மாநாடு திரைப்படம் ரிலீஸான சமயம் என்பதால் அது குறித்தும் பேசினார்… குறிப்பாக அவரது மகன் என்னுடைய வெறித்தனமான ரசிகன் என அவர் சொன்னது என்னால் மறக்கவே முடியாது… அது எனது மனதை தொட்ட தருணமாக இருந்தது." என தெரிவித்தார்.

அதேபோல் நமது கலாட்டா சேனல் சார்பில் உங்களது பயோபிக் படம் குறித்த எண்ணம் ஏதாவது இருக்கிறதா..? அப்படி இருந்தால் யுவன் ஷங்கர் ராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க எந்த நடிகர் சரியாக இருப்பார் என நாம் கேட்டக் கேள்விக்கு, சிரித்தபடியே "யாரும் நடிக்க வேண்டாம்… நானே நடிக்கிறேன்! ஆனால் பயோபிக் குறித்த எந்த எண்ணமும் இப்போது வரை கிடையாது… என தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் & தனுஷுடன் மீண்டும் இணைந்து நானே வருவேன் திரைப்படத்தில் பணியாற்றியது குறித்த சுவாரஸ்ய தகவல்களையும் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்துகொண்டார். ரசிகர்களுடன் யுவன் பேசிய அந்த வீடியோக்கள் இதோ…
 

#AskU1 pic.twitter.com/MgIKCzoNYY

— Raja yuvan (@thisisysr) August 31, 2022

#AskU1 pic.twitter.com/PFSDk9Jm4C

— Raja yuvan (@thisisysr) August 31, 2022

#AskU1 pic.twitter.com/MgIKCzoNYY

— Raja yuvan (@thisisysr) August 31, 2022

#AskU1 pic.twitter.com/XZykO2kKZV

— Raja yuvan (@thisisysr) August 31, 2022