தமிழ் சினிமாவின் தலை சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. இசைஞானி இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவும் இசையில் ஞானி தான். இளையராஜா இசையில் மேதை என்றால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை ஒரு போதை.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையில் அடுத்தடுத்து தலஅஜித்குமாரின் வலிமை, சிலம்பரசனின் மாநாடு, தனுஷ் செல்வராகவன் கூட்டணியின் நானே வருவேன், இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் புதிய படம் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் தயாநரிப்பில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் வழங்கும் எண்ணம் போல் வாழ்க்கை என்னும் புதிய ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. பாடலை இசையமைப்பாளர் எடவின் லூயிஸ் இசையமைக்க, எட்வின் குவிஸ் மற்றும் பிரித்வி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கவிதா இப்பாடலை எழுதி இயக்கியுள்ளார். சாண்டி மாஸ்டர் நடனம் செய்துள்ளார் இப்பாடலில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில் இயக்குனர் சசிகுமார்,ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ்,அசோக் செல்வன்,சூரி, மாஸ்டர் மகேந்திரன், ஜிவி பிரகாஷ் குமார்,கிருஷ்ணா. அஸ்வின்குமார், அதுல்யா ரவி, அம்மு அபிராமி, ஜனனி ஐயர் மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் இந்தப் பாடலை பாடும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. அழகான அந்தப்பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.